தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை திட்டவட்டம்
பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இதனை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை என்றும், ஏழு ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தான் இந்தியன் என்று சொல்லும்போது ஒரு மரியாதை, ஒரு கொண்டாட்டம், ஒரு பயம் ஏற்படும் அளவுக்கு அவரது தலைமையிலான ஆட்சி உதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து go back modi என கூறிய அவர், பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் அமரப்போவதை பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.