யாரையும் நம்பி அதிமுக இல்லை , பாஜகவுடன் கூட்டணி தொடரும் : எடப்பாடி பழனிசாமி அதிரடி

ADMK BJP Edappadi K. Palaniswami
By Irumporai Feb 10, 2023 07:11 AM GMT
Report

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக இரண்டாக பிளவுபடத்துக்கு பிறகு இபிஎஸ் அணி தேர்தல் களம் காண்கிறது. அதுவும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவுடன், அதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரிப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக இரண்டாக பிளவுபடத்துக்கு பிறகு இபிஎஸ் அணி தேர்தல் களம் காண்கிறது. அதுவும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவுடன், அதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரிப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்

திமுக கூட்டணி காணாமல் போகும்

இதன்பின் பேசிய இபிஎஸ், மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனைக்கும் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல்போகும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என விமர்சித்து பேசினார்.

யாரையும் நம்பி அதிமுக இல்லை , பாஜகவுடன் கூட்டணி தொடரும் : எடப்பாடி பழனிசாமி அதிரடி | Bjp Will Continue Palaniswami Takes Action

பாஜக கூட்டணி தொடரும்

பேனா நினைவு சின்னம் குறித்து பேசிய இபிஎஸ், ரூ.1 கோடியில் நினைவு மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைத்துவிட்டு, மீதம் இருக்கும் தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம் எனக் கூறினார் .

யாரையும் நம்பி அதிமுக இல்லை , பாஜகவுடன் கூட்டணி தொடரும் : எடப்பாடி பழனிசாமி அதிரடி | Bjp Will Continue Palaniswami Takes Action

மேலும் பாஜவுடனான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார். அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.