26-இல் வெற்றிக்காக கொக்கு போல காத்திருக்கிறோம்..!! பாஜக அண்ணாமலை!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Nov 09, 2023 10:50 AM GMT
Report

வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கொக்கு போல காத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி

இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, தன்னுடைய என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது, தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது என்பதை காண முடிந்தது என தெரிவித்தார்.

bjp-will-come-to-power-in-2026-says-annamalai

தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் தான் பேசிய கருத்து குறித்து விளக்கம் அளித்த அவர், பொது இடத்தில் பெரியார் கருத்துக்களும் இருக்கலாம் என விளக்கமளித்து, ஆனால் கோயில் முன்பு இருக்கக்கூடாது என்றார். மேலும், பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம் என உறுதிபட தெரிவித்த அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் தலைவர்கள் சிலை பொது இடத்திற்கு மாற்றப்படும் என கூறி, அவர்கள் சிலைக்கு உரிய மரியாதை கொடுகப்படும் என கூறினார்.

ஆட்சியை அமைப்போம்

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் இருந்து ஆட்சி நடத்தி ஆட்சி நன்றாக இருக்கிறது என்று திமுகவினர் கூறுவதை சுட்டிக்காட்டி, ஆனால் மக்கள் ஆட்சி சரி இல்லை என்று தங்களிடம் முறையீடுகிறார்கள் என்றும் விவசாயிகளை பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது என தெரிவித்து எங்கே சென்றாலும் அவர்கள் குறைகள் தான் அதிகமாக பார்க்கமுடிகிறது என்றார்.

bjp-will-come-to-power-in-2026-says-annamalai

லஞ்சம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்ற அண்ணாமலை, தங்களை விமர்சித்த மற்றக்கட்சிகளுக்கு தான் சொல்வது ஒன்றே ஒன்று தான் என கூறி, கொக்கை போல தாங்கள் காத்திருந்து 2026-ஆம் ஆண்டில் மக்களின் நல்லாசியுடன் ஆட்சியை அமைப்பின் என உறுதிபட தெரிவித்தார்.