நான் ஹிந்து தீவிரவாதி..!கெத்தாக பேட்டி கொடுத்தவரை கொத்தாக துாக்கிய போலீசார்
பெரியார்,அம்பேத்கரையும் கோட்சே கொன்றிருக்க வேண்டும் என வன்முறையை துாண்டும் வகையில் பேசிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் திமுக அபார வெற்றி பெற்றது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 135 வாட்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். இவருக்கு பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் அவர் வெற்றி பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் வெற்றி பெற்றது குறித்து யூடியூப் சேனல் ஒன்று மக்களிடம் கருத்து கேட்பு நடத்தியது. அப்போது பேசிய ஈஸ்வரன் சுப்பிரமணியன் என்பவர் நான் ஒரு இ்நது தீவரவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டுத் தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றிருக்க வேண்டும் என ஈஸ்வரன் பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் சர்ச்சை பேச்சு வன்மத்தை துாண்டுவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட தலைவர் கண்ணதாசன் புகார் அளித்திருந்தார்.
மேலும் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் ஈஸ்வரனை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஈஸ்வரன் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாகவும் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.