பாஜகவினர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவன் பதில் சொல்ல வேண்டும் - நடிகை காயத்ரி ரகுராம்..!
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நேற்று தமிழக சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையடுத்து பல்வேறு கட்சியினரும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மாலை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
அப்போது பாஜன கட்சியினர் சார்பில் கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. இதை அகற்றி விட்டு விடுதலை சிறுதைகள் கட்சியினர் தங்கள் கொடியை ஏற்றியதில் மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.இதனால் பாஜகவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மரியாதை செலுத்த நடிகை காயத்ரி ரகுராம் சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர்,அண்ணன் திருமாவளவன் வந்து விட்டு சென்ற பின் கல் அடி சண்டை,கொடி எடுக்குறது.
இது தான் சமத்துவ நாளா? அவுங்க ரவுடிசம் தான் பண்ணுவாங்களா? நாங்க ரவுடிசம் பண்ண வரல, ஐயா அம்பேத்கரை வணங்கிட்டு போக தான் வந்தோம்.
அதை செய்ய விடுங்க மக்கள கொண்டாட விடுங்க.. போலீசார் இருக்கும் போதே அராஜகம்,இது தான் பாதுகாப்பா?
மக்களுக்கு இது தான் பாதுகாப்பு குடுப்பீங்களா நீங்க? 5க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும்,படாத இடத்தில் பட்டுவிட்டார் உயிருக்கு ஆறுதல் சொல்வார்களா? என உணர்ச்சிவசப்பட பேசினார்.
அப்போது செய்தியாளர் இதற்கு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இதற்கெல்லாம் போராட்டமா?இவுங்க எல்லாம் ஒரு ஆளு என்றார்.
தொண்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணன் திருமாவளவன் பதில் சொல்ல வேண்டும் என காயத்ரி ரகுராம் ஆவேசமாக பேசினார்.