குடும்ப ஆண் வாரிசுகளுக்கு மகுடம்..ஆனால் பேசுவதெல்லம் பெண்ணுரிமை - வானதி விளாசல்!
திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டதால் முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அச்சத்தில் உள்ளதாக வானதி விமர்சித்துள்ளார்.
திமுக
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தால் திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் அச்சமடைந்திருப்பது வழக்கறிஞர் மாநாட்டில் அவர் பேசியதிலிருந்து தெரிகிறது. இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத, அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற கோரிக்கையை கூட ஏற்க மனமில்லாத திமுகவுக்கு, '
எப்போதும் தேசியத்தின் பக்கம்' நிற்கும் தமிழக மக்களைப் பார்த்து அச்சம் ஏற்பட்டிருக்கிறது.அதனால்தான், "திமுகவை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக" ஆளுநர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதத்தை பாட மறுத்த திமுகவின் 'தேச விரோத முகம்' அம்பலமானதால் திமுக கலக்கமடைந்திருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாண்டமாக குற்றம்சாட்டி வருகிறார்.
மு.க. ஸ்டாலின்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் 'தந்தை மகன் பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை. அந்த ஒரே குடும்பத்திலும் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் மகுடம் சூட்டப்படும்.
ஆனால், பேசுவதெல்லம் சமூக நீதி, பெண்ணுரிமை.நான்காவது தலைமுறையை அரசியலுக்கு கொண்டுவர இப்போதே ஆயத்த பணிகளை திமுக தொடங்கிவிட்டது.இந்த நான்காவது தலைமுறையிலாவது வீட்டில் இருக்கும் பெண் வாரிசை கொண்டு வரலாமே. அதற்கு திமுகவுக்கு மனமில்லை.
தேச விரோத முகம்
"பாஜக விரிக்கும் வலையில், மத்திய அரசை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிட வேண்டாம்" என்று திமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
பத்தாண்டுகள் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இருந்தும், கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.தனிப் பெரும்பான்மை இல்லாத போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சர்வாதிகார ஆட்சியை நடத்தியது திமுக.
யார் ஒற்றை ஆட்சி முறையை நடத்தி வருகிறார்கள் என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவை பற்றியும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் கூட்டணிக் கட்சிகள் நன்கு அறிவார்கள்.
கூட்டணி கட்சிகளுக்கும் இடையே விரிசல் வந்து விடாதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருப்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. கருவாடு ஒருபோதும் மீனாகாது. முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. என தெரிவித்துள்ளார்.