விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: வானதி சீனிவாசன் என்ன கூறினார்?
தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிக சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அதாவது நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த போது, முதலில் விஜய் த்ரிஷாவை விட்டு வெளியே வரட்டும் என பேசினார்.
இவரது இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தாலும் பதில் ஏதும் கூறாமல் கடந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் அமைதியானவர், பண்பானவர், பொறுப்புடன் பேசக்கூடியவர், எதற்காக திரிஷா பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியதில் எனக்கு வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் மகளிர் உரிமைத்தொகையை தடுக்கப் பார்ப்பதாக கூறுகிறார்கள், மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள், ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் அது என்ன கோடைகால சிறப்பு தொகை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.
