இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து செயல்பட பாஜக வலியுறுத்தல் - சி.டி ரவி
தமிழக நலனுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வலியுறுத்தியதாக பாஜக அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார்.
சிடி ரவி செய்தியாளர் சந்திப்பு
இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இந்த நிலையில் சென்னை கமலாலயத்தில் சி.டி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழக மக்களுக்கு எதிராக, தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக திமுக உள்ளது. மக்களிடம் கெட்ட பெயர் எடுத்துள்ளது திமுக.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்கிறது. திமுக அரசுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.
மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட கண்டனங்களை உயர்த்தியுள்ளதால் திமுக அரசுக்கு எதிராக மக்கள் இருந்து வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோர் திமுக ஒரு தீய சக்தி என்று கூறினர்.தற்போது 2023 ஆம் ஆண்டிலும் அது மாறாவில்லை.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திமுக மீது தமிழ்நாடு மக்கள் கோபத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் திமுகவை அதிமுக ஒன்றிணைந்தால் தான் முடியும் எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.