தமிழகத்துக்கு புதிய பெயரை வைக்க பாஜக முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழகத்தின் பெயரை அதிமுகவுடன் சேர்ந்த பாஜக மாற்ற முயற்சித்து வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிடும் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கருக்கு வாகு செரிக்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், பாஜகவிடம் தமிழகத்தை தற்போது அதிமுக அடகு வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்தியா பிரதமர் மோடியின் கண் தற்போது தமிழகம் மீது விழுந்துள்ளது அதன் முதல் அடியாக தமிழகத்தின் பெயரை "தட்ஷிணபிரதேஷ்" என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது தமிழகத்தின் இரு பெரும் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் மோடி அவர்கள் தமிழகத்துக்கு பல்வேறு கனவுகளோடு அடிக்கடி வந்து செல்கிறார். ஆனால் அவரது வருகையோ ஒவ்வொரு முறையும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்து தான் வருகிறது.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.