உரசலா..? முறிவா..? கூட்டணி குறித்து நாளை அறிவிக்கும் பாஜக..?
அதிமுகாவுடனான கூட்டணி முறிந்ததா? என்பது குறித்து நாளை பாஜக அறிவிக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.
தள்ளிவைக்கும் அதிமுக
தொடர்ந்து ஆட்சியில் இல்லாத போதிலும், கூட்டணி கட்சியையே உடைத்து அதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து இருப்பதாக மத்திய பாஜக அரசு மீது பல குற்றச்சாட்டுக்களை பல எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக மகாராஷ்டிரா மாநில சிவசேனா கட்சியே உள்ளது.
மேலும், தற்போது அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் கட்சி தலைவருடன் முரண்பட்டு தற்போது பிரிந்துள்ளார்.
சிக்கலான சூழல்
அதே போல தமிழகத்தில் பெரிதாக கால் ஊன்ற முடியாமல் இருக்கும் பாஜக அதிமுகவின் துணையுடன் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கருத்துக்கள் உலவுகின்றனர். ஆனால் அதுவே அதிமுகவின் தோல்விகளுக்கு காரணமாகவும் கூறப்படுகின்றது.
ஏனென்றால் பாஜக பேசும் இந்துத்துவ கொள்கைகள் இங்கு தமிழகத்தில் எடுபடாது. அதன் காரணமாகவே பாஜகவிற்கு அதிமுகவின் கூட்டணி முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா- அண்ணா - பெரியார் என திராவிட கட்சி பின்புலத்தை கொண்ட தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்.
அதன் வெளிப்பாடாக சில தினங்கள் முன்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை அதிமுக முன்னணி தலைவர் ஜெயக்குமார் கூறிய நிலையில், அதனை அக்கட்சியின் பல தலைவர்களும் ஆதரித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாளை அறிவிக்கும் பாஜக..?
ஆனால் அதிமுக தலைமை இன்னும் அக்கருத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. இந்த இக்கட்டான சூழலில் பாஜகவின் தமிழக தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை அவர் நடத்தியதாக கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கூட்டணி குறித்து நாளை பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன்,ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் போன்றோருடன் அண்ணாமலை மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் தேசிய தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.