பாஜக-வின் 20 தொகுதிகளிலும் நாங்க தான் ஜெயிப்போம்: திருமாவளவன் அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டிருக்கும் திமுக, விருப்ப மனுக்கள் பெறும் பணிகளை முடித்து நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று கடைசி நாளாக நடைபெறும் நேர்காணனில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நேர்காணலுக்கு இடையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக மேற்கொண்டது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு 6 தொகுதிகளும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களிலும் திமுக கூட்டணி தான் ஜெயிக்குமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார். தொகுதிகளை குறைவாக இருந்தாலும், சனாதன சக்திகள் வரக்கூடாது என்பதற்காக 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.