சமூக நல்லிணக்க பெரியாரே! சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் ஒட்டி போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை பாஜக தொண்டர்களும் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து தமிழக பாஜகவினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அப்படி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் தான் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில் “சமூக நல்லிணக்க பெரியாரே” என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது சர்ச்சை கிளப்பியுள்ளது.மேலும் இதற்கு திராவிடர் கழகத்தினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவம், பெண் விடுதலை, சமூக ஒற்றுமையை வலியுறுத்திய தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் இன்று கொண்டாடும் நிலையில், ஒற்றை கலாச்சாரத்தை வலியுறுத்தும் மோடியை பெரியாருடன் ஒப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளது தவறு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.