களத்தில் நீங்கதான் இல்ல - விஜய்க்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலடி
தமிழிசை செளந்தரராஜன், விஜய் தான் களத்தில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
விஜய் பேச்சு
தவெக தலைவர் விஜய் ஈரோடு சென்றிருந்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் குறித்து எல்லாம் பேச மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக - அதிமுக தேசிய ஐனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஜனநாயகத்தின் குரல்வலை தொடர்ந்து நெரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நான் ஒரு பெண் அரசியல்வாதி, அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து எல்லாம் நான் பேச முடியாது.
எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தவெக தலைவர் விஜய் ஈரோட்டை மஞ்சள் நகரம் என்று கூறியுள்ளார். அந்த மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய பாஜக அரசு.
தமிழிசை பதிலடி
எனவே மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன்னுடைய 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுகிறார். அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு
மக்களுடன் எந்தளவு தொடர்பு இருக்கும் என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் விஜய் தான் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார்.
எனவே விஜய் தன்னை தான் களத்திற்கு சம்மந்தமில்லாதவர் என சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். இந்தியாவில் பாஜக பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. உலகின் சிறந்த பி்ரதமராக நநேந்திர மோடி உள்ளார். எனவே அவர் கூறுவது எங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.