Wednesday, Apr 30, 2025

கலவரம் செஞ்சி தான் தமிழகத்தில் காலூன்றணும் - இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி ஆடியோ!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick a year ago
Report

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடம் கூட வெல்லவில்லை.

பாஜக தமிழ்நாடு

மக்களவை தேர்தலில் இரட்டை இலக்க இடங்களை கைப்பற்றுவோம் என மிகவும் ஆணித்தரமாக நம்பிய பாஜக கூட்டணி கடைசியில் ஏமாற்றமே அடைந்தது. கணிசமாக வாக்கு சதவீதங்கள் அதிகரித்துள்ளது.

Inthu makkal katchi BJP audio tamil nadu kalavaram

ஆனால், கூட்டணி தோல்வியையே சந்தித்தது. 2026-ஆம் ஆண்டிற்கான முன்னெடுப்பு தான் இந்த கூட்டணி என பாஜக கூட்டணிக்கு வந்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். வரும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் இக்கூட்டணி தொடரும் என நம்பப்படுகிறது.

நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?

நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?

தேர்தல் தோல்வி காரணமாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதே போல அவருக்கு மத்திய அமைச்சரவை பதவி இருப்பதாகவும் கூறப்பட்டது. அவையெல்லாம் பொய்யாகி போனது.

கலவரம்

தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வரும் பாஜக - தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி பாஜக ஆதரவில் நிற்கிறது. அண்மையில் வெளியான ஆடியோ ஒன்று பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Modi and Annamalai

அந்த வீடியோ இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், நெல்லை மாவட்ட இந்து முன்னணியின் முன்னாள் செயலாளருமான உடையார், நெல்லை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசியதாக கூறப்படுகிறது. அதில், தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக காலூன்ற முடியும் என உரையாடியது கேட்போருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.