முதல்வரே நினைத்தாலும்ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க முடியாது : சூர்யா சிவா
ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவின் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
சூர்யா சிவா
பாஜக பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.இந்து மதத்தையும் பாதுகாக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்தியானந்தா சார்பாக எனக்குத் தர்ம ரக்ஷன விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டது.
இதில் எனக்கு 100% மகிழ்ச்சிதிராவிட சித்தாந்தத்தில் இருந்து வந்து பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தைப் பாதுகாத்துப் பேசுவதால் இந்த விருதைக் கொடுத்து உள்ளனர்.
பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மதத்திற்குச் சாதகமாகப் பேசுவதற்கே விருது கொடுக்கிறார்கள். அதாவது பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்து மதம் குறித்துப் பேச யாருமே இல்லை என்பதே உண்மையான நிலையாக உள்ளது.
யாரும் ஆர்எஸ்எஸை எதிர்த்துப் பேசுவதில்லை
தமிழ்நாட்டில் இப்படியொரு சூழல் தான் நிலவி வருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் யாரும் ஆர்எஸ்எஸை எதிர்த்துப் பேசுவதில்லை.. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எங்கும் பேசியதாகத் தெரியவில்லை.
திருமாவளவன் தன்னை பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் உண்மை குணம் அவருக்கும் தெரியும்.
இதனால் தான் அவரே 100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்எஸ்எஸை அழிக்க முடியாது என்றும்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்று ஜெயத்துப் பலரும் அமைச்சர்களாக வருவார்கள். தாமரை சின்னத்திலேயே நின்று நிற்போம் என கூறியுள்ளார்.