அனுமதியின்றி போராட்டம்..பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது
பாஜக மகளிரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணாமலை கைது
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பாஜக மகளிர் அணியினர் தொடர்ந்து திமுகவினர் பாஜகவில் உள்ள பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பாஜக மகளிர் அணியினர் மத்தியில் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் உள்ள குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கௌதமி உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரின் பேச்சு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan