அண்ணாமலைக்கு எதற்கு Y பிரிவு பாதுகாப்பு - இது தான் காரணம்!
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எதற்காக இந்த பாதுகாப்பு என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதற்கு பின் தமிழக அரசியலில் சில பரபரப்புகள் தொற்றி கொண்டனர்.

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து விமர்சனம் செய்ததற்கு அவரை விரைவில் சிறைக்கு அனுப்புவோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த பாபா யூசூப் என்பவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதையடுது்து அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு 2 துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள்,ஆயுதம் ஏந்திய 8 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள்,மற்றும் தமிழக காவல்துறையில் சிஐடி பிரிவு பாதுகாவலர்களும் 24 மணி நேர பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
இந்த பிரிவில் தேசிய பாதுகாப்பு பிரிவில் இருந்து 1 அல்லது 2 வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.மேலும் 8 காவலர்களும் பயன்படுத்தப்படுவார்கள்.
இவர்கள் ஒன்று அல்லது இரண்டு வாகனங்ளை பயன்படுத்துவார்கள் இதற்காக ஆகும் செலவு மாதம் ரூபாய் 12 லட்சம் ஆகும்.
கடந்த ஆண்டு அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு பின்னர் அது எக்ஸ் பிரிவாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.