அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு; இங்கே மண் சோறு, அங்கே நடந்தேறிய கூட்டம் - என்ன நடக்கிறது?
அண்ணாமலை உடல் நலம்பெற வேண்டி பாஜகவினர் கோவிலில் மண் சோறு உண்டனர்.
உடல்நலக்குறைவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அவருக்கு சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலையே தொடங்கியது.
பறக்கும் விவாதம்
இதனால் சர்ச்சையும் வெடித்துள்ளது. இந்நிலையில், இவர் பூரண உடல் நலம் பெற வேண்டி, கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு ழிபாடு நடத்தப்பட்டது. அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
தொடர்ந்து, மண் சோறு உண்டனர். இதில், தெற்கு மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர். அதனையடுத்து அண்ணாமலையின் மருத்துவ சர்டிபிகேட் குறித்து டாக்டர் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன்,
ஒரு மருத்துவராக நான் இப்படி ஒரு சுவாசக்குழாய் தொற்றை கேள்வி பட்டதே இல்லை. இது போன தொற்றுக்கு குறைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படாமல் 2 வாரங்கள் படுக்கை ஓய்வு பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இந்த மருத்துவச் சான்றிதழ் யாத்திரையை ஒத்திவைப்பதற்கானது என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.