தவெகவினரிடமிருந்தே பெண்களை பாதுகாக்க முடியாத முதல்வர் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
nainar nagendran slams cm vijay cant save women from tvk cadres: தவெகவினரிடமிருந்தே பெண்களை பாதுகாக்க முடியாத முதல்வர் உங்களுக்கு முதல்வர் பதவி எதற்கு என முதல்வர் விஜய்யை நோக்கி தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெகவினரிடமிருந்தே பெண்களை பாதுகாக்க முடியாத முதல்வர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவறான கண்ணோட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவலின் தாக்கம் தணிவதற்குள், கோவை காரமடை தவெக ஒன்றியக் கழகச் செயலாளர் கருப்பசாமி என்பவர் அக்கட்சியின் பெண் நிர்வாகிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் அப்பெண்ணை சாதி ரீதியாக பேசி அவமானப்படுத்தியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே நினைக்கும் தவெகவினரின் ஆணவமும், அதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் திரு. விஜய் அவர்களின் அலட்சியமும் கடும் கண்டனத்திற்குரியது.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 300-க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 30-க்கும் அதிகமான குற்றங்களில் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இதை எதையும் கண்டிக்காமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் நாளொரு ‘Costume’, தினமொரு ‘Performence’ என ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் திரு, ஜோசப் விஜய்.
இப்படிப்பட்டவரா மாற்றத்தின் அறிகுறி? ‘மாற்றம்’ என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது தான் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆகப்பெரும் அரசியல் சாதனை" என தெரிவித்துள்ளார்.