புலிகள் இருக்க புலிகேசி எதற்கு!! அதிமுகவிற்கு பதிலடி கொடுக்கும் பாஜக !!
முறிந்ததை தொடர்ந்து அதிமுக - பாஜக கட்சிகளிடையே தொடர்நது வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றது.
முறிந்த கூட்டணி
அண்ணாதுரை, பெரியார், ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்ததை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அது முதல் பாஜகவினர் அதிமுகவினரை கடுமையாக விமர்சிக்க துவங்கயிருக்கின்றனர். அதிமுகவின் இந்த முடிவு குறித்து பாஜகவின் தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் அதன் பிறகு இது பற்றி கருத்து தெரிவிக்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோர் தெரிவித்ததாலும், தொண்டர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைத்தே வருகின்றனர்.
போஸ்டர் அலப்பறை
அதே சூட்டுடன் தற்போது பாஜகவினர் போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் புலிகள் போன்ற தலைவர்கள் இருக்கும் போது, புலிகேசி எதற்கு என அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.
அதே போல அதிமுக சார்பில் நவம்பரில் வர வேண்டிய தீபாவளி கூட்டணியை முறித்து கொண்டதால், தற்போது செப்டம்பரிலேயே வந்துவிட்டது என கூட்டணி முறிவை குறிப்பிட்டு போஸ்டர்களும் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.