அம்மா,மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

BJP Chennai sexual harassment
By Thahir Jul 16, 2021 05:43 AM GMT
Report

சென்னையில் அம்மா, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக வழக்கறிஞர் பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மா,மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு! | Bjp Sexual Harassment

சென்னை மூலக்கடையை பகுதியைச் சேர்ந்த தம்பதி, அதே பகுதியில் வசித்து வரும் பாஜக வழக்கறிஞர் பார்த்தசாரதி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்டவரின் கணவன், பார்த்தசாரதியின் மனைவி ஜோசியம் பார்ப்பதால் அவரது வீட்டுக்கு செல்லும் பலருக்கு பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது மகள் மற்றும் மனைவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தசாரதிக்கு எதிராக புகார் அளித்தோம், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏதாவது கேட்டல் அவர் எங்களை மிரட்டுகிறார். பாஜகவில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார். புதிதாக பதவியற்றுள்ள டிஜிபி அவர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். பல குடும்பங்கள் பார்த்தசாரதியின் தொந்தரவால் வீட்டை காலி செய்து விட்டனர் என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுத்து மனைவியையும் மகளையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் பார்த்தசாரதிக்கு எதிராக பாதிக்கப்பட்ட தம்பதி புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.