காவலர் மீது கொடூர தாக்குதல்..போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த பாஜகவினர்
கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலரை பாஜகவினர் கொடூரமாக தாக்கியும், போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோதலாக மாறிய போராட்டம்
நேற்று கொல்கத்தாவில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு ஒன்று கூடினர்.
பின்னர் அவர்கள் பேரணியாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஹவுரா என்ற என்ற பகுதியில் பேரணியாக வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த தடுப்புகளை வைத்து தடுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற போது போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளு மோதலாக மாறவே போலீசார் பாஜகவினரை கலைக்க தண்ணீர் பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது கூட்டத்தில் சிக்கிய காவலர் மீது பாஜகவினர் கம்புகளை கொண்டு கொடூரமாக தாக்கினர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
மேலும் அங்கிருந்த போலீசாரின் வாகனத்திற்கு பாஜகவினர் தீ வைத்து கொளுத்தினர்.இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகும் நிலையில்,

அந்த மாநிலத்தில் உள்ள பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இச்சம்பவம் தொடர்பாக கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் மாநில உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பாஜவினர் காவல்துறை அதிகாரியையும், அரசு வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.