அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும் -வார்னிங் கொடுத்த பாஜக!

BJP K. Annamalai Sellur K. Raju
By Vidhya Senthil Oct 08, 2024 06:25 AM GMT
Report

 அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ 

இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

sellur raju

அவரை கண்டிக்கிறோம். அண்ணாமலை நேர்மையின் அடையாளம். மோடி, வீரத்தின் அடையாளம். சத்ரபதி சிவாஜியை போல் தான் படித்த பட்டங்கள், வகித்த அரசு பதவிகளை நாட்டுக்காக தியாகம் செய்து தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

காட்சியில் சேர்ந்த 3, 4 ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும், ஆண்ட அதிமுகவையும் அரசியலில் ஆட்டம் காண வைத்து, தமிழகத்தில் மிக பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார்.

பாஜக 

தேச பக்தி நிறைந்த வாக்காளர்களின் துணிச்சல் மிகுந்த தலைவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும்.

annamalai

தவறினால் தகுதி இல்லாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவி பெற்று, பல கோடி ரூபாய் ஊழல் செய்து அரசியல்வாதியாக காட்டி வரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக அவர் செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என்று கூறியுள்ளார்.