பாஜகவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது - டெல்லி துணை முதலமைச்சர் விமர்சனம்
பாஜகவினர் ஆட்டத்தை தொடங்கி விட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கவுன்சிலர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன என டெல்லி துணைமுதலமைச்சர் மனோஜ் சிசோடியா டிவிட் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி வெற்றி
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
துணை முதலமைச்சர் ட்வீட்
டெல்லி துணைமுதல்வர் மனோஜ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பாஜகவினர் ஆட்டத்தை தொடங்கிவிட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கவுன்சிலர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. எங்கள் கவுன்சிலர்கள் யாரும் விற்கப்படமாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
கவுன்சிலர்கள் அனைவருக்கும் போன் வந்தாலோ, உங்களை யாரேனும் சந்திக்க வந்தாலோ அதனை பதிவு செய்து விடுங்கள்.’ என மனோஜ் சிசோடியா பதிவிட்டுள்ளார்.
बीजेपी का खेल शुरू हो गया। हमारे नवनिर्वाचित पार्षदों के पास फ़ोन आने शुरू हो गये।
— Manish Sisodia (@msisodia) December 7, 2022
हमारा कोई पार्षद बिकेगा नहीं। हमने सभी पार्षदों से कह दिया है कि इनका फ़ोन आये या ये मिलने आयें तो इनकी रिकॉर्डिंग कर लें।