இது கருத்து கணிப்பு அல்ல.. மோடியின் கருத்து திணிப்பு - செல்வப்பெருந்தகை ஆவேசம்!
இந்தியாவில் நாளை புதிய விடியல் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பாஜக ஆட்சி நாளை முடிவுக்கு வரப்போகிறது. கலைஞர் கருணாநிதி ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது
அவர் இறந்துவிட்டாலும் அரசியலில் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், கருத்து கணிப்பு இல்லை மோடியின் கருத்து திணிப்பு.
புதிய விடியல்
2004-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்கணிப்பு வந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மோடியோடு கருத்து திணிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு தயார் செய்துவிட்டு இதை செய்திருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கே உள்ளது என்று தேட வேண்டிய நிலைமை உள்ளது. இந்தியாவில் நாளை புதிய விடியல் ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக 150 இடங்களை மட்டுமே பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.