பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் வலிமை பெறக்கூடாது - திருமாவளவன் பேச்சு

Thol. Thirumavalavan Tiruchirappalli
By Thahir Dec 18, 2022 07:18 AM GMT
Report

ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் வலிமை பெறக்கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனுக்கு மணிவிழா 

அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மணிவிழா திருச்சியில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , எம்.பி திருநாவுக்கரசர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

இந்த நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் பேசுகையில், நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கு மதவெறியர்களால் ஆபத்து உருவாகியுள்ளது.

BJP, RSS should not gain strength - Thirumavalavan

2024 பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் பா.ஜ.க எந்த எல்லைக்கும் போவார்கள், எதையும் துணிந்து செய்வார்கள் அவர்கள் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அவர்கள் விரும்பியது போல் பாபர் மசூதி இடித்து விட்டார்கள், இந்திய குடியுரிமை சட்டம், சி.ஏ.ஏ நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்கள், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய கடைசி இலக்கு இந்தியாவை இந்து ராஷ்ட்ரியம் ஆக்க வேண்டும் என்பது தான் அதற்காக மதம் சார்ந்த நாடாக மாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் எந்த மதத்திலும் இருக்கலாம் ஆனால் அரசு எந்த மதத்தையும் சார்ந்து இருக்க கூடாது, மதசார்பற்ற நாடாக மதசார்பற்ற அரசாக இருந்தால் தான் இங்கு நீதி நிலைக்கும்.

ஆர்எஸ்எஸ் வலிமை பெற்றால் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு வலிமை பெறும், பெண்களுக்கான ஒடுக்கு முறை வலிமை பெறும் சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும்.

பா.ஜ.க விற்கு தனி கொள்கை என்பது கிடையாது ஆர் எஸ் எஸ் என் கொள்கைதான் பா.ஜ.க வின் கொள்கை அவர்கள் மதவெறி தேசியவாதம் இந்து தேசியவாதத்தை கட்டமைக்க வேண்டுமென தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜ.க, ஆர் எஸ் எஸ் வலிமை பெறக்கூடாது. இந்து தேசிய வாதத்தை உருவாக்க தான் முஸ்லிம் கிறிஸ்தவர்கள் குறித்து நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். தேர்தல் பாதையை கைவிட்டால் கூட எங்கள் கொள்கை பாதையை கைவிட மாட்டோம் என்றார்.