ஒரே ஆண்டில் ரூ.6088 கோடி: பாஜக-வின் வருமானம் என்ன தெரியுமா?
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு அந்த கட்சி சமர்ப்பித்துள்ள ஆண்டு நிதி அறிக்கைகள் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாஜக சமர்ப்பித்துள்ள இந்த ஆண்டு நிதி அறிக்கை இந்தியாவில் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த போது அந்த கட்சியின் நிதியாண்டு வருமானம்(2014-15) சுமார் ரூ.970 கோடியாக இருந்தது.
மேலும் அந்த ஆண்டில் அந்த கட்சியின் ஆண்டு தேர்தல் செலவாக மட்டும் ரூ.913 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சத்தை தொட்ட வருமானம்
இதன் பின் கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ. 570 கோடியாக குறைந்துள்ளது.
ஆனால் மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள்(electoral Bonds) திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு 2016-17 ஆம் நிதியாண்டில் பாஜக வின் ஆண்டு வருமானம் ரூ.1034 கோடியாக பதிவாகியுள்ளது.

2018 - 19 ஆம் நிதியாண்டில் பாஜக-வின் ஆண்டு வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ. 2,410 கோடியாக அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் 2020 - 2021ம் நிதியாண்டில் வருமானம் ரூ.752 கோடியாக குறைந்து இருந்தாலும், மீண்டும் 2021 - 2022 ம் நிதியாண்டில் ரூ.1,917 கோடியாக அதிகரித்துள்ளது.
பாஜகவின் வளர்ச்சி 2023 - 2024 ம் நிதியாண்டில் உச்சம் தொட்டது, அதாவது கிட்டத்தட்ட 2023 -24ம் நிதியாண்டில் வருமானம் ரூ.4340 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே சமயம் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த வருமானம் முழுவதும் தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு பாஜகவின் நன்கொடைகள் மூலம் ரூ.6,088 கோடி வருமானம் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.