புதுச்சேரியில் 9 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
புதுச்சேரியில் பா.ஜ., போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் பா.ஜ., - என்.ஆர்.காங்., - அ.தி.மு.க. கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இக்கூட்டணியில், என்.ஆர்.காங்., -16, பா.ஜ., -9, அ.தி.மு.க. -5 இடங்களில் போட்டியிடுகின்றன. பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஒப்புதலின்பேரில், மாநில தலைவர் சாமிநாதன், வெளியிட்டார். பா.ஜ., வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், ஒரு வாரத்திற்கு முன்புவரை வேறு கட்சியில் இருந்து, பின்னர் விலகி, பா.ஜ.,வில்சேர்ந்த 6 பேருக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜான்குமாரின் வாரிசு விவிலியன் ரிச்சார்ட்ஸ், மதுபான ஆலை உரிமையாளர் ஜி.என்.எஸ்., ராஜசேகர், வி.எம்.சி.எஸ்.மனோகரன் ஆகிய 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.