மறுபடியும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
தமிழகத்தில் மேலும் 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இருப்பினும் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது.
உதகமண்டலம் ,தளி, விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி பெரும்பாலும் எழுந்தன. இந்நிலையில் பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் அறிவித்துள்ளது. தளி தொகுதியில் நாகேஷ்குமார், விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை எதிர்த்து ஜெயசீலன் களமிறக்கப்பட்டுள்ளார். உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன் களம் காண்கிறார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த முறையும் வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியாகியுள்ளது.
