ஹிஜாப் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

bjpradhakrishnanhijab tnelectionhijabissuebjp controversialtalk
By Swetha Subash Feb 21, 2022 02:35 PM GMT
Report

பாஜக முகவர் ஹிஜாபை அகற்ற சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர்,மதுரை மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை.ஹிஜாப் அணிவது நோக்கம் அல்ல சாதாரண பெண்களைப் போல வர வேண்டும். என்பதே விருப்பம் இதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசினார்.