சாதி குறித்து... கேள்வித்தாள் சர்ச்சை - ஈரோட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சர்ச்சை கேள்வி
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். செமஸ்டர் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வியால் தற்போது சலசலப்பும், சர்ச்சையும் எழுந்துள்ளது.
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், கேள்வித்தாள் விவகாரத்தை கண்டித்து ஈரோடு மாவட்ட பாஜக எஸ்.சி எஸ்.பி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஈரோடு எம்பி தேர்தல் பொறுப்பாளர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி. சிவகாமி, செந்தில், வேதானந்தம், தெற்கு மாவட்ட மகளிரணி தலைவர் புனிதம் ஐயப்பன் மற்றும் ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை உட்பட திரளான பாஜகவினர் கலந்து கொண்டார்கள்.