பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

bjp-poltical-admk
By Jon Jan 09, 2021 12:05 PM GMT
Report

உத்திரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் இடிக்கப்பட்டது. இதில் அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாபர் மசூதி நிலம் தொடர்பாக வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையும் துரிதமடைந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், எல்.கே.அத்வானி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து இவ்வழக்கில் சி.பி.ஐ. சாட்சிகளாக இருந்த ஹாஜி மெகபூப் (70), ஹபிஸ் சயது அக்லக் (80) ஆகியோர் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் நேற்று மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளனர்.