இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது - ஜோதிமணி எம்.பி விமர்சனம்

BJP MP Jothimani
By Thahir Nov 04, 2021 04:41 AM GMT
Report

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது.

நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி!' என பதிவிட்டுள்ளார்.