செத்துமடியும் பாஜக தொண்டர்கள் - பாஜக தலைவர் கதறல்!

bjp banerjee mamta dilip ghosh
By Anupriyamkumaresan Jun 16, 2021 04:09 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக தொண்டர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குறிவைத்து தாக்கிவருவதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

செத்துமடியும் பாஜக தொண்டர்கள் - பாஜக தலைவர் கதறல்! | Bjp Persons Died Dilip Ghoshal Shout

மேலும், கடந்த ஒன்றரை மாதமாக 30க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திலிப் கோஷ், பாஜகவை சேர்ந்தவர்கள் குறைந்தது 30 முதல் 32 பேர் கடந்த ஒன்றரை மாதமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி எந்தவொரு ஆலோசனையும் நடத்தவில்லை. திரிணமூல் காங்கிரஸின் அரசியல் எதிர்தரப்பினர் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லை என தெரிகிறது.

செத்துமடியும் பாஜக தொண்டர்கள் - பாஜக தலைவர் கதறல்! | Bjp Persons Died Dilip Ghoshal Shout

இதுமட்டுமல்லாமல், பாஜகவை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட பல பாஜக தொண்டர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.