பாஜக பிரமுகர் காரில் உல்லாசம் - செருப்பை கழற்றி அடித்த மனைவி..வைரலாகும் வீடியோ!

BJP Viral Video Uttar Pradesh
By Sumathi Aug 22, 2022 05:24 AM GMT
Report

காரில் பெண் நண்பருடன் உல்லாசமாக இருந்த பாஜக பிரமுகரை அவரது மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் உல்லாசம்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் சங்கர். அவர் புண்டல்கந்த் பகுதியின் பாஜக மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது காரில் பெண் நண்பருடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

பாஜக பிரமுகர் காரில் உல்லாசம் - செருப்பை கழற்றி அடித்த மனைவி..வைரலாகும் வீடியோ! | Bjp Person Beaten By Wife With Slipper

இதை அறிந்த அவரின் மனைவி தனது தாய், சகோதரர்கள், உறவினர்கள் என அழைத்துச் சென்று அவர் இருந்த காரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் வெளியே வராமல் கார் உள்ளேயே இருந்த கணவரை மனைவி வலுக்கட்டாயமாக இறக்கி கோவத்தில் தனது செருப்பை கழற்றி அடித்துள்ளார்.

செருப்பால் அடித்த மனைவி

அதேபோல் கணவருடன் இருந்த பெண்னையும் மனைவி தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜூஹி நகர போலீஸார், அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் அவர்கள் வழங்கிய புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.