பெரியார் திராவிட கழகம் - பாஜகவினர் இடையே பயங்கர மோதல்.. சரமாரி தாக்குதல்
புதுச்சேரியில் பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பாஜகவினர் இடையே போராட்டத்தின் போது மோதல் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இரு தரப்பினரிடையே கடும் மோதல்
புதுச்சேரி காமராஜர் சாலை, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை முன்பு பெரியார் திராவிட கழகத்தினர் மனு தர்ம நுால் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இவர்களின் போராட்டத்தை கண்டிக்கும் வகையில் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் 30க்கும் மேற்பட்டோர் கமராஜர் சிலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது காமராஜர் சிலை முன்பு இருந்த பெரியார் திராவிட கழகம் மற்றும் பாஜகவினர் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், செருப்புகளை கொண்டு தாக்கி கொண்டனர்.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதியே பரபரப்புககுள்ளானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்து முன்னணி தலைவரின் மண்டை உடைக்கப்பட்டது.
தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
பின்னர் இரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.             
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    