ஓபிஎஸ் குறித்த கேள்வி - ஒரே வரியில் அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?
பிரதமரின் வருகையால் அரியலூர் பெருமை தமிழகத்தின் பெருமையாக பார்ப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-க்கு மறுப்பு
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். நல்ல மாவட்டமான அரியலூர் பின் தங்கி உள்ளது. ஆட்சியாளர்கள் ஏதோ காரணமாக அரியலூர் மாவட்டத்தில் தனி கவனம் செலுத்தவில்லை.
பிரதமரின் வருகையால் அரியலூர் பெருமை தமிழகத்தின் பெருமையாக பார்க்கிறோம். சோழபுரம் ஊரின் நிலைமை மாறும். 1025ல் கட்டப்பட்ட சோழபுரம் கோவில் 250 ஆண்டுகளுக்கு விளங்கிய நகரம். தற்போது பிரதமரின் வருகைக்கு பின் மைய புள்ளியாக உள்ளது.
அண்ணாமலை ரியாக்ட்
இனி ஆன்மீக பக்தர்கள் அதிகமாக வருவார்கள். பொருளாதாரம் உயரும். ஒட்டல்கள், சுற்றுலா நிறைய உயரும். இது அரியலூர் மாவட்டத்திற்கு பெருமையாக பார்க்கிறோம். உலகத்தின் 4வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். வாரணாசி எம்.பியாக பிரதமர் உள்ளது.
காசி தீர்த்ததுடன் கோவிலுக்கு வந்தார்கள். கங்கையும், காவிரியும் கலப்பதாக பார்க்கிறேன். ஒ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தாரா என்பது எனக்கு தெரியாது. நாங்கள் சாதாரண தொண்டர்கள் தான். தமிழகத்தின் மீதான் அன்பை பிரதமர் எங்கள் தோளை தட்டி சொல்வார்.
பிரதமரை அருகில் இருக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக தொண்டர்கள் தள்ளி இருக்கிறார்கள். தொண்டர்கள் மீதான அன்பை தான் எங்கள் மீது காட்டுகிறார். தேசிய கட்சி தலைவர் தேர்தல், மாநில நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. பொறுப்பு என்பது நிலை இல்லாதது.
பொறுப்பு மாறிக் கொண்டு இருக்கும். பொறுப்பு இல்லாததால் வேலையை குறைத்து கொண்டோம் என்ற பேச்சுக்கிடமில்லை. கட்சி எந்த பொறுப்பு கொடுத்தாலும் செய்ய வேண்டும். முதலமைச்சர் டிஸ்சார்ஜ் வீட்டிற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும். 511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.