தேசிய தலைமை கனவு பொய்யானது? ஒதுக்கப்படும் யோகி! அடுத்த தேசிய தலைமை இவரா
ஆப் கி பார் 400 பார் என்ற கனவுடன் களமிறங்கிய பாஜக, இம்முரை பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
பாஜக
கோட்டையான உத்திர பிரதேசத்திலேயே அக்கட்சி ஆட்டம் கண்டுள்ளது. அதே போல் , பெரிய நம்பிக்கை கொடுக்கும் மகாராஷ்டிராவில் அக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த முறை 48 இடங்களில் 23 இடங்களை கைப்பற்றிய நிலையில், இம்முறை 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதற்கு பொறுப்பேற்று மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கவனம் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. cow belt எனப்படும் பாஜகவின் மிக வலுவான மாநிலமான உத்திர பிரதேசத்தில் வெல்பவர்களே மத்தியில் ஆட்சி அமைப்பார்கள் என்ற கருத்து இந்திய அரசியலில் இன்னும் நீடிக்கிறது.
அப்படி இருக்கும் உத்திரபிரதேசத்தில் இம்முறை பாஜக கைப்பற்றியது வெறும் 33 இடங்களை தான். கடந்த முறை அக்கட்சி அம்மாநிலத்தில் 63 தொகுதிகளை கைப்பற்றியது. இதிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு அக்கட்சி பெரிய மைலேஜாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கணித்த நிலையில், மக்களின் தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியிலேயே அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு மாநிலங்கள் பின்னடைவை கொடுத்தாலும், மத்திய பிரதேசத்தில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது பாஜக.
சிவராஜ் சிங் சவுகான்
மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்டார். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியவர், விதிஷா தொகுதியில் 821408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ஆளுமை நிரூபித்துள்ளார்.
கடந்த சில காலமாக பாஜகவில் ஓரங்ககடப்பட்டவராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தற்போது பெரும் எழுச்சியை கட்சிக்குள் கண்டுள்ளார். அவருக்கு விரைவில் தேசிய தலைமை பதவியை ஏற்கும் நிலையை உண்டாக்கி கொடுத்துள்ளது என்றெல்லாம் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஜே.பி.நாட்டாவின் பதவி காலம் இம்மாதத்துடன் நிறைவடையும் நிலையில்,சிவராஜ் சிங் சவுகான் பெயரே அந்த இடத்திற்கு அடிபடுவதாக கூறப்படுகிறது. மோடி அடுத்து பாஜகவில் தலைவராக யோகி தான் நாட்டில் முன்னிலை படுத்தப்படுவார், அவருக்கு தேசிய தலைமை பதவி காத்திருக்கிறது என்று எண்ணப்பட்ட நிலையில், மக்களின் முடிவால் பாஜக உள்கட்டமைப்பு பெரிய மாறுதலை நோக்கி நகர்ந்து வருகின்றது.