குழப்பத்தில் தமிழக பாஜக : தமிழ்நாடு வரும் பாஜக தலைவர்

BJP
By Irumporai Mar 07, 2023 03:26 AM GMT
Report

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கலில் தமிழக பாஜக

வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

குழப்பத்தில் தமிழக பாஜக : தமிழ்நாடு வரும் பாஜக தலைவர் | Bjp National President Jp Natta Visit Tamil Nadu

மேலும் சமீபத்தில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.  

நட்டா வருகை

அண்ணாமலையும் அவருக்கு எங்கு சென்றாலும் பணி சிறக்க தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார், இதனையடுத்து பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் கட்சியிலிருந்து விலகினார்.

இந்த பரபரப்பான நிலையில் ஜே பி நட்டா தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. கட்சியில் அடுத்தடுத்து 2 முக்கிய நிர்வாகிகள் விலகல் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் நட்டா, உயர்மட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.