10% இட ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கது: தமிழக பாஜக வரவேற்பு

BJP
By Irumporai Nov 07, 2022 08:57 AM GMT
Report

 உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயண திருப்பதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீடு

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது . இந்த நிலையில் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கினை அறிவித்தது .

அப்போது உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கது: தமிழக பாஜக வரவேற்பு | Bjp Narayanan Thirupathy Support 10 Reservation

அதே சமயம் இந்த வழக்கில் அதிகபட்சமாக மூன்று நீதிபதிகள் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என  இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக துணைத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார் .

தமிழக பாஜக வரவேற்பு

இதுகுறித்து அவர் தெரிவித்து குறித்து கூறிய அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் இந்த சட்டம் வரவேண்டும் இந்தியா முழுவதும் பொதுவானது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் .

இந்த நாட்டில் இருக்கிற அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது இந்த சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது .

இது அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இந்த அமர்வின் தீர்ப்பு தெரியப்படுத்தி இருக்கிறது ஜாதி என்பதை தாண்டி மனித நேயம் என்ற அடிப்படையில்தான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நாராயண திருப்பதி கூறியுள்ளார்