திமுக அரசால் எங்களை போல பெட்ரோல் விலையை குறைக்க முடியுமா?

Smt Nirmala Sitharaman BJP
By Swetha Subash May 23, 2022 12:48 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்தியாவில் தொடர்ந்து வரலாறு காணாத விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110-ஐ கடந்து விற்பனையானது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு பெரும் நிம்மதியான செய்தியை மக்களுக்கு அளித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முந்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மக்கள் பயன் அடையும் வகையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

அதன்படி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பதாக கேரள மாநில அரசு அறிவித்தது. அங்கு பெட்ரோல் மீதான வாட் வரி ரூ.2.41-ம் டீசலுக்கான வாட் வரி லிட்டருக்கு ரூ. 1.36-ம் குறைக்கப்பட்டது. 

அதேபோல், கேரளாவை தொடர்ந்து, மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. 

இந்நிலையில் பல மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த திடீர் முடிவு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பாஜக-வை சேர்ந்த நாராயணன் திருப்பதி அவர்கள் சொல்லும் பதிலை ஐபிசி தமிழின் நேர்காணல் வழியாக காணலாம்.