"வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்களுக்கு மட்டும் தான் ஹிஜாப் தேவை” - பாஜக எம்.பி. பிரக்யா தாகூர்

pragyathakuronhijab hijabrowkarnataka bjpmppragyathakur controversialcomment
By Swetha Subash Feb 17, 2022 07:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கர்நாடக மாநிலம் உடுப்பியில் முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கங்கள் எழுப்பி கோஷமிட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

"வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்களுக்கு மட்டும் தான் ஹிஜாப் தேவை” - பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் | Bjp Mp Pragya Thakur On Hijab Controversy

பல்வேறு தரப்பினரும் இதற்கு தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வகுப்பறைக்கு மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கபட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து சர்ச்சை கருத்தை பாஜகவை சேர்ந்த எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கோவிலில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

“வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்களுக்கு மட்டும், ஹிஜாப் அணிவது தேவை. பொது இடங்களில் ஹிஜாப் தேவையில்லை. எல்லா இடங்களிலும் ஹிஜாப் அணிய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்கள் அணியலாம்.

உங்களுக்கு மதரசா உள்ளது. நீங்கள் அங்கு ஹிஜாப் அணிந்தால், அதுபற்றி எங்களுக்கு ஒன்றுமில்லை. வெளியில், இந்து கோவில்கள் இருக்கும் இடத்தில், ஹிஜாப் தேவையில்லை’’ என்றார்.

மேலும், ‘‘ஹிஜாப் என்பது புர்கா. தீயக் கண்களால் பார்க்கப்படுவதற்கு எதிராக புர்கா பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட இந்துக்கள் அந்த எண்ணத்தில் அவர்களை பார்க்க மாட்டார்கள்.

அவர்கள் பெண்களை வணங்குகிறார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் ஹிஜாப் அணிய வேண்டும்’’ என கூறியுள்ளார்.