வாக்கு சேகரிப்பின் போது பெண்ணுக்கு முத்தம் - பாஜக எம்பியின் தகாத செயல்!

India West Bengal Lok Sabha Election 2024
By Jiyath Apr 09, 2024 12:32 PM GMT
Report

பாஜக எம்.பி. ஒருவர் வாக்கு சேகரிப்பின் போது ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

பெண்ணுக்கு முத்தம் 

மேற்கு வங்காள மாநிலம் மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு என்பவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வாக்கு சேகரிப்பின் போது பெண்ணுக்கு முத்தம் - பாஜக எம்பியின் தகாத செயல்! | Bjp Mp For Kissing Woman Election Campaign

இந்நிலையில் வாக்கு சேகரிப்போரின் போது, ஒரு பெண்ணுக்கு அவர் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி முதல் ஆளுநர் பதவி ஒழிப்பு வரை - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி முதல் ஆளுநர் பதவி ஒழிப்பு வரை - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

விமர்சனம் 

அதேபோல,  'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

வாக்கு சேகரிப்பின் போது பெண்ணுக்கு முத்தம் - பாஜக எம்பியின் தகாத செயல்! | Bjp Mp For Kissing Woman Election Campaign

மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன் ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.