‘’ சார் நீங்க மைண்ட் வாய்ஸ் -ன்னு நினைச்சு மைக்ல பேசிட்டிங்க ‘’ - மைக் ஆனி-ல் இருந்தது தெரியாமல் ரகசியம் பேசி சிக்கிய பாஜக எம்.பி

bjpmp oncamera madhuswamy
By Irumporai Jan 07, 2022 10:09 AM GMT
Report

மைக் ஆன் நிலையில் இருந்ததை அறியாமல், அமைச்சர் குறித்த ரகசியங்கள் பேசி பாஜக எம்.பி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துமகூரு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ, சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாக கூறி சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் முன்னதாகவே மேடையிலிருந்து கிளம்பிச் சென்றார்.

செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பைரதி பசவராஜிடம் ரகசியமாக பேசத் தொடங்கினார். அப்போது மைக் ஆன் நிலையில் இருந்ததை இருவரும் கவனிக்கவில்லை.

சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசுவாமியை ஒருமையில் பேசிய எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ, "இதோ கிளம்பிச் செல்கிறாரே இந்த அமைச்சர், இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் வட கொரிய சர்வாதிகாரி (கிம் ஜாங் உன்) போன்றவர். இவர் நம் மாவட்டத்தை பாழாக்கிவிட்டார்.

இந்த பாழாய்ப்போன நபரால் அடுத்த தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஒரு சீட் கூட நம் கட்சிக்கு கிடைக்காது.

இவ்வாறு ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட அமைச்சர் பைரதி பசவராஜ் அவரை அமைதிப்படுத்த முயன்றபோதும், அவர் சமாதானம் அடையாமல் தொடர்ந்து பேசி கொண்டிருந்தார்.

இந்த ஒட்டுமொத்த உரையாடலும் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.