“வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் செய்ய வேண்டாம்.. போறதுனா போங்க” - பேரவையில் கடுப்பான அப்பாவு

NEET Tnassembly NainarBJP AppavuSpeaker
By Irumporai Feb 08, 2022 06:24 AM GMT
Report

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது.

நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், "அறிக்கையின் அடிப்படையில் மசோதா கொண்டு வரப்பட்டது என்று ஆளுநர் கூறியிருப்பது மிகவும் தவறான தகவல்.

நீட் தேர்வை தமிழகம் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

தன்னிச்சையாக ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியது என்பது சரியான முடிவு அல்ல. பொது மக்களிடம் கருத்து கேட்டபிறகே நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல.கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. மட்டுமல்லாது இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது." என்றார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து அதை திருப்பி அனுப்பியுள்ளார் .

பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகே நீட் விளக்கு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் மசோதா தொடர்பான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை பலமுறை தேர்வு எழுதுவோருக்கு நீட்தேர்வு சாதகமாக உள்ளது பயிற்சி மையங்கள் படித்தவர்கள் மட்டுமே வெற்றி பெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது.

என சட்டப்பேரவையில் நீர் விளக்கு மசோதாவை தாக்கல் செய்து மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார். இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதா குறித்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு நீட் சட்டம் சரியில்லை என மாநில அரசு நினைத்தால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் சட்டசபைக்கு அல்ல உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு மீறக் கூடாது என பாஜகவின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார் .

அத்துடன் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியது. அத்துடன் சட்டப்பேரவையில் குறுக்கிட்டு பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அத்துடன் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு பேசிய போது வெளியே போவதற்கு இவ்வளவு பில்டப் வேண்டாம் ,போக நினைத்தால் போய்விடுங்கள் என்று சபாநாயகர் அப்பாவும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.