திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ. : வீடியோவால் சர்ச்சை
BJP
By Irumporai
திரிபுரா சட்டசபையில் பாஜக எம்.எல்,ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்தது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா
திரிபுராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, இந்த நிலையில் பாக்பாசா தொகுதி பாஜக எம்.எல்,எ சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தனது செல்போனில் ஆபாச படம் பார்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சர்ச்சை
வீடியோ வேகமாக பரவிய நிலையில், விரைவில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.