டாஸ்மார்க் திறக்க மது பிரியர்களுக்காக குரல் கொடுத்த பாஜக எம் எல் ஏ .. வைரலாகும் ஆடியோ!
மது பிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க மது கடையினை திறக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்டுள்ள ஆடியோ தற்போது சர்சையினை கிளப்பியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் பேசியதாக தற்போது ஒரு ஆடியோவெளியாகியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில் ஜான்குமார் எனது தொகுதியில் மது கிடைக்காமல் மதுவுக்காக சானிடைசரை குடித்து இறந்து விடுகிறார்கள்.
இது தனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.குடி என்பது மனநோயாக மாறிவிட்டது.
ஒரு வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையை திறக்க வேண்டும். ஆகவே மதுப்பிரியர்கள் குடிப்பதற்காக ,மதுக்கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் .
இன்னும் சில நாட்களில் மதுக்கடைகள் திறப்பு குறித்து செய்திகள் வெளியாகும் என அந்த ஆடியோ பதிவில் உள்ளது.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுக்கடையினை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கோரிக்கையாக ஜான் குமார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மதுக்கடைகளை திறக்க போராடும் பிஜேபி MLA #ஜான்குமார்.; வைரலாகும் ஆடியோ..! இவர்தான் மக்களை காப்பாற்றுவாரா.?#JohnKumar #FilmiStreet pic.twitter.com/qwiMsJjCF8
— Filmi Street (@filmistreet) June 7, 2021
மக்களை பாதுகாக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினரே மது குடிங்கள் என்று மது பிரியர்களை கூறும் ஆடியோவிற்கு . பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.