'சங்கி' என்ற வார்த்தையின் அர்த்தம் இதுதான் - விளக்கம் கொடுத்த வானதி சீனிவாசன்!
சங்கி என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்
நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வேளச்சேரியில் நடைபெற்றது.
இதில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டு புதிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழக பா.ஜ.க. சார்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது.
தென்சென்னையில் நாடாளுமன்ற அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் அலுவலகம் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
விளக்கம்
சங்கி என்பதை எதிர்கருத்து வைத்திருப்பவர்களும், எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களும் குறிப்பிட்ட பதமாக பயன்படுத்துகிறார்கள்.
பாஜகவில் இருப்பவர்களை இழுவு படுத்தவும், ட்ரோல் செய்வதற்கும் சங்கி என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சங்கி என்பதற்கு எங்களால் விளக்கம் சொல்ல முடியாது.
எங்களை கேட்டால் அதற்கு விளக்கமாக என்ன சொல்வோம் என்றால், இந்த நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் நலன்களை சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும். இந்திய நாட்டின் குடிமக்கள் அவர்களை சங்கி என்று சொல்வதில் பெருமை என்று சொல்வோம்.