இருமுடி கட்டி சபரிமலையில் பாஜக MLA வானதி சீனிவாசன்..!
கோவை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
நடை திறப்பு
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
இன்று காலை சிறப்பு பூஜைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 21 ஆம் தேதி இரவு 10 மணியுடன் கோவில் நடை மூடப்படும்.
ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளதையடுத்து தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.
சபரிமலை சென்ற வானதி
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.
வடகோவை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் இருமுடி கட்டினர். இதற்காக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.