பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி!

Tamil nadu BJP Vanathi Srinivasan
By Jiyath Nov 02, 2023 02:23 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று

கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலாவருமாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி! | Bjp Mla Vanathi Srinivasan Hospitalized

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் அவர் கோவை திரும்பினார். இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பது. இதனையடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வானதி சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி! | Bjp Mla Vanathi Srinivasan Hospitalized

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.